அரசாங்கத்திற்கு எதிராக ஆயுத கிளர்ச்சி முயற்சி; 4 பேர் கைது
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுத கிளர்ச்சி முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சிலர் ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் நகரை கைப்பற்றும் நோக்கில் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத கொள்கை
வன்முறைத் தீவிரவாத கொள்கைகளுடன் இந்த நபர்கள் செயற்பட்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்களில் மூவர் கியூபெக்கைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் அனைவரும் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேக நபர்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் என மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
24 வயதான மார்க் ஔரேல் ஷபோ, 24 வயதான சைமன் அங்கர் ஆடெட், 25 வயதான ரபாயல் லாகஸே மற்றும் 33 வயதான மேத்யூ போர்ப்ஸ் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.