சஸ்கட்ச்வான் தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு சகோதரர் சடலமாக மீட்பு
சஸ்கட்ச்வான் கத்தி குத்துத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சகோதரர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கத்தி குத்து தாக்குதல் நடாத்தி 10 பேரை படுகொலை செய்த இடத்திற்கு அருகாமையில் ஒர் புல்வெளியில் சந்தேக நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
31 வயதான டேமியன் சன்டர்சன் என்பவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும் 30 வயதான மயில்ஸ் சன்டர்சனை பொலிஸார் இதுவரையில் கைது செய்யவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக மயில்ஸ் சன்டர்சன் கருதப்படுகின்றார் என்பதுடன் இவர் ஆபத்தானவர் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சந்தேக நபரும் சம்பவத்தில் காயமடைந்திருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட டேமியனின் உடலில் பலத்த காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் காயங்கள் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டதாக தென்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் தொடர்ச்சியாக தேடுதலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.