பிரித்தானிய அரசியாரின் சவப்பெட்டியை பார்த்து மயங்கிவிழுந்த உறவினர்!
மறைந்த பிரித்தானிய ராணியின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு வந்தபோது அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது.
ராணியின் சவப்பெட்டி உள்ளே கொண்டு செல்லப்பட்டபோது மற்ற அரச குடும்பத்தினருடன் கென்ட் இளவரசர் மைக்கேலின் மகள் லேடி கேப்ரியல்லா ( Lady Gabriella) வின்ட்சர் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
இந்நிலையில் , சவப்பெட்டி உள்ளே வரும்போது சில சலசலப்பு ஏற்பட்டது, அப்போது லேடி கேப்ரியெல்லா ( Lady Gabriella) தான் மயங்கி விழுந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன்பின்னர் லேடி கேப்ரியல்லா ( Lady Gabriella) சேவையின் எஞ்சிய பகுதிக்கு மீண்டும் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.
லேடி கேப்ரியல்லா ( Lady Gabriella), மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துடன் நெருக்கமாக இருந்தார். ராணி எலிசபெத் இளவரசர் பிலிப்புடன் 2019-ல் அவரது திருமணத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வார இறுதியில் லேடி கேப்ரியல்லா ( Lady Gabriella) வின்ட்சர் வேறு ஏதேனும் நிகழ்வுகளில் பங்கேற்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை, எனினும் அவர் ( Lady Gabriella)திங்கள்கிழமை ராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.