சசிகலா உயிருக்கு ஆபத்து; உறவினர் பகீர் குற்றச்சாட்டு
சிறையில் இருந்து விடுதலையாக இருந்த நிலையில் சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரது உறவினர் திவாகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள திவாகரன், சசிகலா கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சலில் இருந்துள்ளார் என்றும் ஆனால் சிறையில் அவருக்கு சரியான சிகிச்சையளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மூச்சுத் திணறல் ஏற்பட்டால் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து, அதன்பின் சிகிச்சை அளிக்க வேண்டும், ஆனால், அந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியில்லை என்பதால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள்.
இதேவேளை 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் காலதாமதப்படுத்துகின்றனர் என்றும் அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் உள்ளதாகவும் திவாகரன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதனிடையே சசிகலாவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெள்ளியாகியுள்ளது.