ரொறன்ரோவில் வீட்டு வாடகைத் தொகையில் சரிவு
கனடாவின் ரொறன்ரோ நகரில் தொடர்மாடி வீடுகளுக்கான வாடகை தொடர்ச்சியாக சரிவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக ரொறன்ரோவில் சராசரி குடியிருப்பு ஒன்றின் வாடகையானது குறைவடைந்துள்ளது.
ரென்டல்ஸ்.சீஏ என்னும் ரியல்எஸ்டேட் இணையதளத்தின் ஜனவரி மாத அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் தடவையாக வாடகையில் சரிவு பதிவாகியிருந்தது.
அதன் பின்னர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் வாடகை குறைவடைந்திருந்தது.
ஒராண்டுக்கு முன்னர் இருந்த தொகையை விடவும் கடந்த ஒக்ரோபர், நவம்பர் மற்றம் டிசம்பர் மாத வாடகைகள் குறைவடைந்துள்ளன.
எவ்வாறெனினும், கனடாவில் வீட்டு வாடகை மிகவும் அதிகமான ரொறன்ரோ இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.
முதல் இடத்தை வான்கூவார் வகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.