கனடாவில் வாடகை தொகை தொடர்பில் வெளியான அறிக்கை
கனடாவின் வாடகை தொகை தொடர்பில் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிக்கையின் பிரகாரம் பெரிய நகரங்களில் வாடகை தொகை குறைவடைந்துள்ள அதேவேளை சிறிய நகரங்களில் வாடகை தொகை அதிகரித்துள்ளது.
Rentals.ca and Urbanation நிறுவனங்களினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாங்கூவார் வாடகை சந்தையில் வாடகை தொகையானது ஆறு வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக வாடகை தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ரொறன்ரோ நகரின் வாடகை தொகை ஏழு வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக இவ்வாறு வாடகை தொகை குறைவடைந்துள்ளது. ஒட்டாவா, மொன்றியால் போன்ற நகரங்களிலும் வாடகை தொகை குறைவடைந்துள்ளது.
இதேவேளை, சிறு நகரங்களில் வாடகை தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கியூபெக்சிட்டி நகரத்தில் வாடகை தொகை 22% வாடகை தொகை அதிகரித்துள்ளது.
மேலும் சராசரி வாடகை தொகையானது கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஆகஸ்ட் மாதத்தில் சரிவினை சந்தித்துள்ளது.