பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய பிரித்தானியர்; காரணம் என்ன தெரியுமா!
பிரித்தானியாவின் தனிமையான தெருவில்' 127 காலி மனைகள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு குடியிருப்பாளர் தனது வீட்டைக் காலி செய்ய மறுத்துள்ள்ள சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த நிக் விஸ்னியுஸ்கி (Nick Wisniewski)என்பவர், தனது வீட்டை காலி செய்து வேறு இடத்திற்குச் செல்ல மறுத்துள்ளார். நிக் விஸ்னியுஸ்கி (Nick Wisniewski), வடக்கு லனார்க்சையர், ஸ்டாநோப் பிலேஸ் என்ற இடத்தில் வசிக்கிறார்.
அங்குள்ள் 128 வீடுகளில், 127 வீட்டார்கள் வேறு இடத்திற்கு 2020 டிசம்பர் மாதத்துடன் இடம் பெயர்ந்து சென்றுவிட்டபோதும் இவர் மட்டும் இன்னும் அங்கேயே வசித்து வருகிறார்.
அங்குள்ள குடியிருப்புகளை தகர்க்கவுள்ளதாக தெரிந்தும் நிக் அவ்விடத்தை விட்டு வெளியேறவில்லை. கவுன்சில் அதிகாரிகள் நிக்கிற்கு மாற்று வீடு வாங்க 35 ஆயிரம் பவுண்ட் அளித்தது மட்டுமல்லாமல், இரண்டு வருடங்கள் இலவசமாக வசிக்கவும் வசதிகள் செய்து தர தயாராக இருந்துள்ளனர்.
எனினும் விடாக்கொண்டனாக, வீட்டை காலி செய்ய மறுக்கிறார் நிக் விஸ்னியுஸ்கி (Nick Wisniewski). நிக் விஸ்னியுஸ்கி (Nick Wisniewski) இந்த வீட்டை 2017ல் சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த வீடு அவரது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என அவர் கூறுகின்றார். அதேசமயம் சுற்றி மற்ற வீடுகளில் குடியிருந்தவர்கள் வெளியேறிக்கொண்டிருந்த போதும் இவருக்கு மனம் மாறவில்லை.
சமயங்களில் தனிமையை உணர்வதாகக் கூறும் நிக் (Nick Wisniewski) , அது நிரந்தமற்றது என்று பெரிதாக ஏற்றுக்கொள்வதில்லை என்றும் கூறுகிறார். அதனால் தான் என்ன நடந்தாலும் காலி செய்யப்போவதில்லை என கூறியுள்ளார்.
பலருக்கும் தாம் வாழ்ந்த வீடு எப்போதும் மனதிற்கு நெருக்கம்தான். வாழ்ந்த வீட்டை விட்டு செல்லும்போது மனமே உடைந்துபோகும்.
படையப்பா படத்தில் கூட சிவாஜி, கடைசியாக தூணை கட்டிப்பிடித்துக்கொண்டு உயிரை விடும் காட்சி இன்னும் பலருக்கு மறக்கமுடியாததாக உள்ள நிலையில், நிக் (Nick Wisniewski) இன் செயலும் அதை போன்ற ஒன்றுதான்.