அமெரிக்காவில் குடியிருப்பில் வீசிய துர்நாற்றம்; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் புரூக்களின் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஜான் ருகெரோவின்(75) என்ற நபரின் உடல் சிதைந்து இறந்த நிலையில் உயிர் அபாய லேபிள்களுடன் கூடிய கேனிஸ்டர்களுக்கு அடுத்ததாக கண்டெடுக்கப்பட்டதாக வியாழன்கிழமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசிவதை அந்த அபார்ட்மெண்டில் தரைதளத்தில் மோமோ உணவகம் வைத்து இருந்த உரிமையாளர் சோஹில் ஜமான் கவனித்துள்ளார். அதோடு கடந்த 10 நாட்களாக ஜான் ருகெரோவையும் தாம் பார்க்கவில்லை என்பதை உணர்ந்த ஜமான் உடனடியாக 911க்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஜான் ருகெரோவின் வீட்டை சோதனையிட்டபோது ஜான் ருகெரோ உயிர் அபாய லெபிள்களுடன் கூடிய கேனிஸ்டர்களூக்கு அடுத்ததாக அமர்ந்த நிலையில் உடல் சிதைந்து இறந்து கிடந்ததை பொலிஸார் கண்டுள்ளனர்.
அத்துடன் ருகெரோவின் குடியிருப்பில் இருந்து கச்சா வரைப்படங்கள், ஓவியங்கள், சில இரசாயன கலவைகள், பேட்டரி, சிலிண்டர்களில் ஒன்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன், ஒரு துண்டு காகிதத்தில் எச்சரிக்கை - ஆபத்து, இந்தக் கதவைத் திறக்காதே. ஏன் இறக்க வேண்டும்? என்பது போன்ற வார்த்தைகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுத் தொடர்பாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், ருகெரோ பயங்கரவாத தாக்குதலுக்குத் திட்டமிடும் சாத்தியக்கூறுகளை தள்ளுபடி செய்தனர், ஆனால் ருகேரோவிற்கு மனநலப் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என நம்புவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இந்த சம்பவம் குறித்து FBI இன் கூட்டு பயங்கரவாதப் பணிக்குழு, நகரின் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை மற்றும் பிற நிறுவனங்களின் அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ருகேரோ இறந்து குறைந்தது 1 வாரமாவது ஆகி இருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமௌஅம் ருகெரோவின் அண்டை வீட்டார் டிராடோ வியாழக்கிழமை அவரைப் பற்றி தெரிவித்த கருத்தில்,
ருகெரோ அற்புதமான மனிதர், எப்பொழுதும் அனைவரையும் வாழ்த்துவார், அனைவருக்கும் அவரைத் தெரியும், எப்போதும் நன்கொடை. அவ்வளவு அக்கறை கொண்ட மனிதர் என தெரிவித்தார்.