உம்ரா புனிதப் பயணத்திற்குத் தயாரான ஓய்வுபெற்ற இமாம் விமான நிலையத்தில் உயிரிழப்பு
துருக்கியில், மக்காவுக்கான உம்ரா புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்குத் தயாராகியிருந்த ஓய்வுபெற்ற இமாம் ஒருவர், விமான நிலையத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார்.
அப்துல்லா ஒஸ்கான் (Abdullah Ozkan) என்ற ஓய்வுபெற்ற இமாம், கொன்யா (Konya) விமான நிலையத்தில் உம்ரா பயணத்திற்கான ஆடைகளை அணிந்திருந்த நிலையில், பிரார்த்தனையில் சிரம் பணிந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளதாகவும், அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனிதப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இறைவனை வழிபட்ட நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பலரிடையே சோகத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் சிலர் இத்தகைய மரணத்தை மிகவும் பாக்கியமான மரணமாகக் கருதுகின்றனர்.