வருமான முகவர் நிறுவன பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!
கனடாவின் வருமான முகவர் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுமார் 35000 வருமான முகவர் நிறுவன பணியாளர்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.
தமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதனால் போராட்டம் கைவிடப்படுவதாக வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பளத்தை 12.6 வீதத்தினால் உயர்த்துவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.
எதிர்வரும் 2024ம் ஆண்டு வரையில் இவ்வாறு சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, இன்று முற்பகல் முதல் கனடிய வருமான முகவர் நிறுவன பணியாளர்கள் கடமைக்குத் திரும்புவார்கள் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சுமார் இரண்டு வாரங்களாக வருமான முகவர் நிறுவன பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.