மனைவியால் பறிபோகும் ரிக்ஷி சுன்னக்கின் பொன்னான வாய்ப்பு!
இந்திய மனைவியின் வரி விவகாரத்தால் பிரதமராகும் வாய்ப்பை இங்கிலாந்து நிதி அமைச்சர் சிக்ஷி சுன்னக் இழக்கவுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, தனிப்பட்ட சொத்து மதிப்பில் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) மனைவியும், இந்தியப் பெண்ணுமான அக்சதா மூர்த்தி (Akshata Murthy) முதலிடத்தை பிடித்துள்ளார்.
2021 சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியல் தகவல் படி ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் (Akshata Murthy) வசம் உள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் டாலர்) என கணக்கிடப்பட்டுள்ளது.
இதைத்தவிர, சொந்த நிறுவனங்களில் இருந்து அக்சதா மூர்த்தி வருவாய் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் உள்ள கென்சிங்டனில் உள்ள 7 மில்லியன் பவுண்டுகள் கொண்ட ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீடு மற்றும் கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு பிளாட் உள்பட குறைந்தது நான்கு சொத்துக்களை அக்சதா மூர்த்தி வைத்துள்ளார்.
2010 இல் பேஷன் லேபிலான அக்சதா டிசைன்ஸை அக்சதா மூர்த்தி (Akshata Murthy) உருவாக்கினார். 2013 இல் அக்சதா மூர்த்தி கணவருடன் சேர்ந்து நிறுவிய கேடமரன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். அதேவேளை இங்கிலாந்தில் குடியுரிமை பெறாதவர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த அவசியமில்லை என்ற சட்டம் உள்ளது.
குடியுரிமை அல்லாத வரி அந்தஸ்தைக் கொண்டிருப்பதால் வரி செலுத்தாததால் எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்படுகிறார். அக்சதா மூர்த்தி மீதான தாக்குதலால், ரிக்ஷி சுன்னக் அரசியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன் கணவரின் மதிப்பு பாதிக்கப்படாத வகையில் தனது வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த உள்ளதாகவும், "மக்கள் தாங்கள் வாழும் உலகத்தைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நல்லது செய்வது நாகரீகமானது " என அக்சதா மூர்த்தி (Akshata Murthy) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak)கூறுகையில்,
தன்னை விமர்சிப்பவர்கள், தனது மனைவிக்கு எதிராக பொய் பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளதாகவும், அக்சதா (Akshata Murthy) என்னை திருமணம் செய்து கொண்டதால் அவளது நாட்டுடனான உறவை துண்டிக்குமாறு கூறுவது நியாயமானதாகவோ அல்லது நியாயமாகவோ இருக்காது. அவர் தன் நாட்டை நேசிக்கிறாள்.
நான் என்னுடையதை விரும்புவதைப் போல. இங்கிலாந்தில் அவர் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் அவர் இங்கிலாந்து நாட்டிற்கு வரி செலுத்துகிறார் என கூறினார்.
அதேசமயம் ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு அடுத்த பிரதமராக வருவதற்கு 35 சதவீத வாய்ப்பு இருந்தது, அடுத்த போட்டியாளரை விட 3 மடங்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. இப்போது, அவரது மனைவியின் வரி சர்ச்சைக்குப் பிறகு, சுனக் (Rishi Sunak) அடுத்த பிரதமராகும் வாய்ப்பு 12% ஆகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.