டொரொண்டோவில் ரைட்ஷேர் வாகன ஓட்டுநரின் மோசமான செயல்
டொரொண்டோ நகரின் மேற்குப் பகுதியில் இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஒரு ரைட்ஷேர் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வெஸ்டன் Weston Road மற்றும் எக்லின்டன் Eglinton Avenue West பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இந்த சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு பெண் பயணிகள் தங்களது பயண துரத்தை நிறைவு செய்து வாகனத்திலிருந்து இறங்கிய பின்னர் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஓட்டுநர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்தின் மாடிப் பகுதிக்குள் அவர்களைத் தொடர்ந்து சென்றதாகவும், அங்கேயே இருவரையும் பாலியல் தாக்குதல் செய்துவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் பின்னர், டொரொண்டோவைச் சேர்ந்த 30 வயதுடைய மொஹமட் அப்துல்மாலிக் பாபிகர் (Mohamed Abdulmalik Babiker) என்பவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்தந பர் மீது இரு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
அவர் ஆகஸ்ட் 25 ஆம் திகதிதி ஓன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் பாதிப்படைந்தோர் இருக்கக்கூடும் என போலீசார் கவலை வெளியிட்டுள்ளனர்.