ராஜகுடும்பத்தால் பிரிட்டன் அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டிய வருவாய் எவ்வளவு?
பிரிட்டன் ராஜகுடும்பத்தால் ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டன் அரசாங்கம் மில்லியன் கணக்கான பவுண்டுகள் வருவாய் ஈட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் அரசாங்கம் பொதுமக்கள் வரிப்பணத்தில் குறிப்பிட்ட தொகையை ராஜகுடும்பத்திற்கு ஆண்டு தோறும் அளித்து வருகிறது. இருப்பினும், பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த ராஜகுடும்பம் தங்கள் பங்கிற்கு ஏராளமான வருவாய் கொண்டு வருகிறது.
முக்கியமாக சுற்றுலா மூலமாக ஆனால் மற்ற முறைகள் மூலமாகவும் பிரிட்டன் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டித்தருகிறது. வின்ட்சர் மாளிகையில் மதிப்பு 19 பில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வின்ட்சர் மாளிகை மற்றும் ஃபிராக்மோர் மாளிகை ஆகிய இரண்டும் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. இங்கு சுற்றுலாப்பயணி ஒருவருக்கு 26.50 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதனால் மட்டுமே அரசாங்கத்திற்கு பல மில்லியன் பவுண்டுகள் வருவாய் கிடைக்கிறது. இந்த இரு மாளிகைக்கு பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனை, கிளாரன்ஸ் மாளிகை, ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனை உட்பட 13 ராஜகுடும்ப இல்லங்கள் மற்றும் ராணியார் தொடர்பான கேலரியும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி வருகிறது.
2019 மற்றும் 2020 வருடாந்தர அறிக்கையின் அடிப்படையில், இந்த 13 இல்லங்களிலும் சுமார் 3,285,000 மக்கள் பார்வையிட்டுள்ளனர். இதனால் ஈட்டப்பட்ட வருவாய் என்பது 49,859,000 பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, ராஜகுடும்பம் தொடர்பான பரிசுக் கடை விற்பனையும் நாட்டின் ஆண்டு வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.