நாடு முழுவதும் சுற்ற மாதம் ரூ.750 மட்டும் போதும்...முக்கிய நாட்டின் அசத்தல் திட்டம்
மாதம் ரூ.750க்கு நாடு முழுவதும் பயணம் செய்யும் திட்டத்தை ஜெர்மன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை சமாளிக்கவும், பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் இந்த திட்டம் உள்ளது.
ஜேர்மனியில் விலைகள் உயர்ந்ததால், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு பயணச் சலுகைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் மலிவான பயணத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்திற்கு ஜேர்மன் மேலவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, மாதம் 9 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.750) செலுத்தி நாடு முழுவதும் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடை காலத்தில் மக்கள் பயணம் செய்வதற்காக கொண்டு வரப்படும் இந்த திட்டம் ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மன் அரசாங்கம் 2.5 பில்லியன் யூரோக்களை மாநிலத்திற்கு செலவிடும் என்று மதிப்பிடுகிறது.