இந்திய மருத்துவ நிறுவனத்தின் குடோன் மீது ரஷியா தாக்குதல்
ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று உக்ரைனிலுள்ள இந்திய மருத்துவ நிறுவனத்தின் களஞ்சியசாலையை தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உக்ரைனின் குசும் நகரில் உள்ள இந்திய மருத்துவ நிறுவனத்தின் களஞ்சியசாலையை ரஷ்யா ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது.
இந்தியாவின் நட்பு நாடு என கூறும் ரஷ்யா, இந்திய வணிகங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில், இந்திய மருத்துவ களஞ்சியசாலை மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.