உக்ரைனின் உக்கிர தாக்குதலால் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா
மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி மொஸ்கோவில் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை
வெவ்வேறு திசைகளிலிருந்து நகரத்தை தாக்குதவதற்கு முன்பே சுமார் 19 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலில் முக்கிய அதிவேக வீதிகளில் ஒன்றில் சில இடிந்து விழுந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என மொஸ்கோவின் மேயர் செர்ஜி சோபியானின் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஆளில்லா விமான தாக்குதல் குறித்து உக்ரேன் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.