போரிஸ் பெயரில் உக்ரைன் இராணுவத்தில் உருவாக்கப்பட்ட பிரிவை அழித்த ரஷ்யா!
உக்ரைன் இராணுவத்தில் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) பெயரில் உருவாக்கப்பட்ட பிரிவை ரஷ்யாவின் வாக்னர் குழு மொத்தமாக அழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றியுள்ள நிலையில், வாக்னர் குழு குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
உக்ரைனின் 24வது ஆயுதமேந்திய பிரிவு பக்முத் நகரில் நடந்த கடுமையான மோதலில் தோற்கடிக்கப்பட்டது என வாக்னர் தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமின்றி அதற்கான ஆதாரமாக காணொளி ஒன்றையும் வாக்னர் குழு வெளியிட்டுள்ளது.
அதில், அந்த பிரிவுக்கு போரிஸ் ஜோன்சன் என பெயர் சூட்டப்பட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக விளாடிமிர் புடினின் (Vladimir Putin) ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியை அளிப்பதில் அமெரிக்காவுக்கு அடுத்து போரிஸ் ஜோன்சனின் அப்போதைய அரசாங்கமே முன்வரிசையில் நின்றது.
இதனாலையே, உக்ரைனில் போரிஸ் ஜோன்சன் ஒரு ''ஹீரோவாக'' கொண்டாடப்படுகிறார்.
வாக்னர் தளபதி தெரிவிக்கையில்,
''பக்முத் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பை ஜோன்சன் பிரிவு தங்கள் கட்டுப்பாட்டில் காத்து வந்தனர். அவர்களை மொத்தமாக அழித்து தற்போது கைப்பற்றியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உக்ரைன் தரப்பில் இருந்து இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஜோன்சன் பிரிவானது பல மாதங்களாக பக்முத் பகுதியில் போரிட்டு வருகிறது.
அது மாத்திரமின்றி இந்த 24வது ஆயுதமேந்திய பிரிவானது கொசோவோ மற்றும் ஈராக்கில் அமைதிப்படையாகவும் செயல்பட்டுள்ளது.
இதனாலையே, ரஷ்யா இராணுவம் மற்றும் வாக்னர் குழுவினர் பக்முத் பகுதியை இலக்கு வைத்து கடுமையாக தாக்கி வருகின்றனர்.” என தெரிவித்தார்.