ட்ரம்ப்க்கு பதிலடி வழங்கிய ரஷ்யா ; அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்
ரஷ்யாவிற்கு அருகே 2 அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்திருந்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம்.
அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.