போர் உக்கிரத்திலும் பெண் ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்திய ரஷ்யா!
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் ரஷ்யா, தனது பெண் ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்தப்பட்டுள்ளது. 'Makeup under Camouflage' என்ற தலைப்பில் இந்த அழகி போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ஏவுகணை படைகளை சேர்ந்த பெண் ராணுவ வீரர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இராணுவ இதழான 'ரெட் ஸ்டார்' வெளியிட்ட அறிக்கையில்,
``இந்த அழகு போட்டியில் சுமார் 40 அழகிகள் பங்கேற்றனர். முதல் போட்டியே போர் ஒப்பனை மற்றும் அதன் பயன்பாடு பற்றியதாகும்.
போட்டியில், கதிரியக்க, இரசாயன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும், வாயு முகமூடிகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு உடைகள் அணிந்து, AK-74 ரகத் துப்பாக்கி தாங்கிய ஆடைகளை அணிந்துகொண்டு, போர் மண்டலத்தின் தீ-தாக்குதல் மண்டலத்தைப் பெண் வீரர்கள் கடந்து செல்வது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
அடுத்த கட்ட போட்டியாக அவர்களின் பொது அறிவு சோதிக்கப்பட்டது. மேலும், படைப்பு மற்றும் சமையல் தொடர்பான சோதனைகளும் அந்த அழகு போட்டியில் இருந்தன.
அதேசமயம் இந்த போட்டியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் இளம் பெண்கள் அல்ல என்றும், வயதான பெண்களும் கலந்துகொண்டனர் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி Olga Kirillova என்ற பெண்ணும் இதில் கலந்து கொண்டார், அவருக்கு 23 வயதுடைய மகளும், 3 வயதுடைய பேரனும் உள்தாக கூறப்படுகின்றது.
மேலும் Olga ரஷ்ய ஏவுகணை படைகளின் பிரிவில் பணியாற்றுவதாகவும், , சுடுவதில் கைதேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




