உக்ரைன் Kyiv மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்; பலர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு அருகிலுள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளதாகக் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கீவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ரஷ்ய ட்ரோன்கள் ஒரு சேமிப்புக் கிடங்கைத் தாக்கியதால் ஏற்பட்ட வெடிப்பு, அப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ட்ரோன் தயாரிக்கும் உபகரணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கைத் தமது படைகள் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.