உக்ரைனின் லிவிவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் இன்று 23-வது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்யாவின் தாக்குதலில் இன்று மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதெச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கிவில் இன்று காலை அடுக்குமாடி கட்டிடம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் , ஒருவர் பலியானார். 11 பேர் காயம் அடைந்தனர்.
அதேபோல், கிராம்டோர்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் 6 பேர் காயம் அடைந்ததாக மாகாண கவர்னர் பாவ்லோ கிரிலென்கோ தெரிவித்தார்.
உக்ரைன் லிவிவ் நகரின் வடக்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷிய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.
அதேவேளை பொடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து 98 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் 12 பேர் மீட்கப்பட்டனர் லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பராமரிப்பு ஆலை ஒன்றில் இன்று காலையில் தாக்கப்பட்டபோது உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
லுவீவ் போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பாதுகாப்பு அதிகாரிகள், ரஷிய படைகள் சமீபமாக எங்கும் முன்னேறவில்லை, படைவீரர்களின் மன உறுதி மற்றும் தளவாட பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
தென்கிழக்கு நகரமான மேரியோபோல், ரஷ்ய படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.