மூன்று வாரங்களில் 7,000 வீரர்களை இழந்த ரஷ்யா!
உகரைன் - ரஷ்ய மீதல் இதுவரை முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய இராணுவம் மூன்று வாரங்களில் 7,000 வீரர்களை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீதான மூன்று வார ஆக்கிரமிப்பில் ரஷ்யாவின் இராணுவம் 7,000 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
செய்தி ஊடகங்கள், உக்ரேனிய புள்ளிவிவரங்கள், ரஷ்ய புள்ளிவிவரங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுக்குள்ளான ரஷ்ய டாங்கிகள் மற்றும் துருப்புக்களின் வீடியோ படங்களைப் பார்ப்பதன் மூலம் தொகுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை உகரைன் - ரஷ்ய போரில் 13,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.