சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த ரஷ்யா
உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ரஷ்யாவின் ராணுவ ஆக்கிரமிப்பை அடுத்து, தாக்குதல்களை உடனடியாக நிறுத்த உத்தரவிடுமாறு உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில், ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு, சர்வதேச ஒப்பந்தங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ரஷ்யாவை பிணைக்கும் என்று உக்ரைன் கூறியது.
இந்நிலையில், இந்த உத்தரவை பரிசீலிக்க முடியாது என்றும், இந்த உத்தரவை அமல்படுத்த இருதரப்பு ஒப்புதல் தேவை என்றும், ஆனால் இதுவரை எந்த ஒப்புதலும் கிடைக்கவில்லை என்றும் ரஷ்ய அதிபர் பெஸ்கோவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.