ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து துருக்கி தகவல்
போரை நிறுத்த ரஷ்யா - உக்ரைன் இடையே ஒப்பந்தம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
போரை நிறுத்த உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் துருக்கி மத்தியஸ்தம் செய்து வருகிறது.
துருக்கியின் அண்டல்யா நகரில் கடந்த சில நாட்களுக்கு உக்ரைன் - ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் போரை நிறுத்த நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
போர் நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே ஒப்பந்தம் ஏற்பட சூழ்நிலை நெருங்கிவிட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது.