யுக்ரைனுக்கு நிபந்தனை இடும் ரஷ்யா ; போரில் புதிய திருப்பமா?
யுக்ரைன் உடனான மோதலை, அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர தாம் தயாராக உள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இதற்கு யுக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகும் முயற்சியை கைவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யா கைப்பற்றி தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் நான்கு பிரதேசங்களிலிருந்தும் யுக்ரைன் படைகள் விலக வேண்டும் எனவும் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யா புதிய வெற்றிகளைக் காணும் என தான் உறுதியாக நம்புவதாகவு புட்டின் கூறியுள்ளார்.
யுக்ரைன் எல்லை முழுவதும் ரஷ்ய இராணுவம் முன்னேறி வருகின்ற அதேவேளை, யுக்ரைன் படைகள் பின்வாங்குதையும் அவதானிக்க முடிவதாக ரஷ்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.