எல்லைக்குள் புகுந்த உக்ரைனின் 84 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!
ரஷ்யாவின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் நாட்டின் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நேற்றிரவு ரஷ்யாவின் எல்லைக்குள் டிரோன்கள் மூலம் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான உக்ரைனின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம், எல்லை தாண்டி வந்த 84 உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ராஸ்டோவ் பகுதியில் 36 டிரோன்களும், பிரையன்ஸ்க் பகுதியில் 21 டிரோன்களும், பெல்கோராட் பகுதியில் 14 டிரோன்களும், 6 வோரோனெக் பகுதியில் 6 டிரோன்களும், மற்றும் குர்ஸ்க் மற்றும் தம்போவ் பகுதிகளிலும், ஒரு டிரோன் கிராஸ்னோடார் பகுதியிலும் தலா மூன்று டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.