ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும் ; டிரம்ப் எச்சரிக்கை
தொடர்ந்து இடம்பெறும் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3-ம் உலக போரை ஏற்படுத்தி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என வெள்ளை மாளிகையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை.
அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போரானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும் என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.