ரஷ்யா- உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) ஆகியோர் துருக்கியில் சந்திக்கவுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு கடந்த மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய பின்னர் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாக அமையவுள்ளது.
இந்த சந்திப்பு மார்ச் 10 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இராஜதந்திர மட்ட தகவல்கள் மார்ச் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளை ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் இதுவரை சாதகமாக முடியாத நிலைல், இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.