ரஷ்யா - உக்ரைன் போர்; விரைவில் வெளிவர உள்ள நல்ல செய்தி
ரஷ்யா- உக்ரைன் போர் ஒருமாதம் கடந்துள்ளபோதும் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இரண்டு வாரங்களுக்குள் சந்திக்கலாம் என துருக்கி தெரிவித்துள்ளது.
அதன்படி ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) மற்றும் உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) இரண்டு வாரங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று துருக்கி இன்று கூறியது.
ரஷ்யா -உக்ரைன் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான உயர்மட்ட பேச்சுக்கள் ஒரு விடியலை ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியாகி உள்ளது.
இவ்வாறான நிலையில் முதன்முறையாக வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு (Mevlüt Çavuşoğlu) ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ள நிலையில் ரஷ்ய - உகரைன் போர் முடிவுக்கு வருமா என்கின்ற எதிபார்ப்பை தோற்றுவித்துள்ளது.