உக்ரைன் யுத்தக்கைதியை ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளிய ரஷ்ய படை
உக்ரைனை சேர்ந்த யுத்தக்கைதியொருவரை ரஸ்ய படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவொன்றும் வெளியாகியுள்ளது.
பதுங்குழியொன்றில் சிகரட் பிடித்துக்கொண்டிருக்கும் உக்ரைனைசேர்ந்த போர்வீரர் சுட்டுக்கொல்லப்படுவதை அந்த வீடியோ காண்பித்துள்ளது.
உக்ரைன் சூளுரை
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்த வீடியோ திங்கட்கிழமைசமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது நாட்டை சேர்ந்த போர்க்கைதியை சுட்டுக்கொன்ற ரஸ்ய படையினரை கண்டுபிடிக்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளது. அந்த கொலைகாரர்களை நாங்கள்கண்டுபிடிப்போம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதோடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இது குறித்த உடனடி விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் உக்ரைன் வேணடுகோள் விடுத்துள்ளது.