உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்ய தாக்குதல் ; இருவர் பலி
உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள ஸ்டாரோகோசாச்சே (Starokozache) எல்லைச் சாவடி மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்தனர் என பிராந்திய ஆளுநர் ஒலெஹ் கிப்பர் (Oleh Kiper) உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதோடு, எல்லைக் கடக்கும் சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.
எனினும், பிற்பகலுக்குள் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக யுக்ரைன் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் உக்ரைன்-ரஷ்யா போரின் தீவிரத்தை தொடர்ந்து வெளிக்காட்டி வருவதுடன், எல்லைப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளன.