ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை கையளிப்பதற்கு தயங்கும் ரஸ்ய அதிகாரிகள்
சிறையில் உயிரிழந்த ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸே நவல்னியின் உடலை அவரது தாயரிடம் கையளிப்பதற்கு ரஸ்ய அதிகாரிகள் மறுக்கின்றனர் என நவால்னியின் நெருங்கிய சகாவொருவர் தெரிவித்துள்ளார்.
பிரேதப்பரிசோதனை முடிவடைந்த பின்னரே உடலை கையளிப்போம் என ரஸ்ய அதிகாரிகள் நவால்னியின் தயாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் நடந்துகொண்டிருந்த வேளை தீடிரென மயக்கமடைந்து வீழ்ந்து நவால்னி உயிரிழந்தார் என ரஸ்ய அதிகாரிகள் அவரின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
தீடீர் இறப்பு நோய் அறிகுறிகாணப்பட்டுள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் நவால்னியின் தாயாரிடம்தெரிவித்துள்ளனர்.
எனினும் இது ஒரு தெளிவற்ற போதுவான விளக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைக்கு அருகில் உள்ள நகரமொன்றிற்கு நவால்னியின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நவால்னியின் தாயாருக்கு தெரிவித்தனர் அவர் அங்கு சென்றவேளை பிரேத அறை மூடப்பட்டிருந்தது என நவால்னியின் சகாக்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாவது பிரேதப்பரிசோதனை முழுமையானதாக காணப்படாததால் மற்றுமொரு பிரேதப்பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியுள்ளது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடயங்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே நவால்னியின் உடலை அதிகாரிகள் மறைக்கின்றனர் எனதெரிவித்துள்ள நவால்னியின் சகாக்கள் அவரது உடலை உடனடியாக குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.