ஒரே இரவில் பல பகுதிகளில் தாக்குதல்கள் நடத்திய ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள்

Sahana
Report this article
ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்ட 30 மணி நேர உயிர்த்த ஞாயிறுக்கான போர் நிறுத்தம் நிறைவடைந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஒரே இரவில் பல பகுதிகளில் ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
வான் தாக்குதல் தொடர்பாக உக்ரேன் விமானப் படையினால் முன்னெச்சரிக்கை வெளியிடப்பட்டதால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தெற்கு நகரமான மைக்கோலைவில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக நகர முதல்வர் தெரிவித்துள்ள போதிலும், உயிரிழப்புக்கள் ஏற்பட்டதா என்பது குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
யுத்த நிறுத்த காலத்துக்கான விதிமுறைகளை தமது இராணுவம் சிறப்பான முறையில் கடைப்பிடித்ததாக தெரிவித்துள்ளதுடன், முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைக்கோட்டிற்கு அப்பால் செல்லவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் கீவ் உட்பட பல உக்ரைன் நகரங்களில் வசிப்பவர்கள் வான் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அருகாமையில் உள்ள பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு உடனடியாக செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.