தானே ஹெலிகொப்டரில் பயணித்தவர் விபத்தில் சிக்கி பலி
ரஷ்யாவில் வீட்டில் தாமாகவே தயாரித்த ஹெலிகொப்டரில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவின் கிரோவ் பகுதியில் உள்ள ஓமுட்னின்ஸ்கி மாவட்டத்தைச் சேர்ந்த 88 வயதான ஒரு முதியவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
தனது சொந்தக் கையால் உருவாக்கிய விமானங்களால் உள்ளூரில் புகழ் பெற்றிருந்தவர், தனது புதிய உருவாக்கமான வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் பறக்க முயன்ற போது உயிரிழந்தார்.
நேற்றைய தினம் நடந்த இந்த முயற்சியின்போது, அந்த முதியவர் தனது சுயமாக உருவாக்கிய ஹெலிகாப்டரில் பறக்க முயன்றார் என்று வோல்கா பிராந்திய போக்குவரத்து அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்தது.
ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட முயன்றபோது தானாகவே அழிந்துவிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் தரையை விட்டு உயரவில்லை. மாறாக, “என்ஜின் தொடங்கப்பட்டபோது, தரையில் இருக்கும்போதே, என்ஜின் சக்தி அதிகரித்த நிலையில், முதன்மை ரோட்டர் கத்திகள் (பிளேடுகள்) பிரிந்தன.
இதனால், 1937-ல் பிறந்த விமானிக்கு காயங்கள் ஏற்பட்டன,” என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த முதியவர் ஓமுட்னின்ஸ்கி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் சில மணி நேர சிகிச்சையின்பின்னர் அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.