உக்ரைனில் 5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி
உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா நகரில் மக்கள் வசிக்க கூடிய, 5 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் 11 பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியிருப்பு கட்டிடத்தில் தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எங்களது மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் பயங்கர நாளாக மாற்றுவதற்கு அந்த பயங்கரவாத நாடு விரும்புகிறது என ரஷ்யாவை குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எங்களது நிலத்தில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஓட ஓட விரட்டுவோம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களே முழு அளவில் பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார்.