உக்ரைனை நோக்கி சீறிப்பாய்ந்த ரஸ்ய ஏவுகணையால் பதற்றம்!
ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஸ்யாவின் ஏவுகணைகள் ராடரில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து போலந்து ஜனாதிபதி அவசர கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மிகப்பெரிய வான்தாக்குதல் இது
வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான் பரப்பிற்குள் நுழைந்தன என போலந்தின் இராணுவதளபதி ஜெனரல் வைஸ்லோ குக்குலா தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட பாரிய வான்தாக்குதல்களின் போதே ரஸ்ய ஏவுகணை போலந்து ஊடாக உக்ரைன் சென்றுள்ளது.
உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமானபின்னர்ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வான்தாக்குதல் இது என உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள்சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ரஸ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.