ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு
ரஷ்யாவின் ரூபிளின் மதிப்பு ஒரு டாலர் 64 ரூபிள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது,
இதற்கு முன்னர் சிறிது காலம் 62.7 ஒரு டாலர் என்ற மதிப்பை எட்டி உள்ளது.
அதேவேளை ஐந்து வருடங்களில் இல்லாத அளவு ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான ஐரோவுக்கு எதிராக அதிக மதிப்பை கண்டுள்ளது.
இந்த வருடம் மிகவும் சிறப்பாக செயல்படும் நாணயகளின் ரூபிள் முதல் இடத்தில உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் செயற்கை முறையில் நாணயங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற கட்டுப்பாடுகளை பெப்ரவரி மாதம் விதித்தது ஒரு காரணம் ஆகும்.
ரஷ்யாவின் மத்திய வங்கி வெளியிட்ட தகவலின் படி இந்த வருடம் ஜனவரி இல் இருந்து ஏப்ரல் மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பு மூன்று மடங்காக அதிகரித்து $95.5 பில்லியன் ஆக இருந்தது.
இதற்கு முக்கிய மற்றுமொரு காரணம் இறக்குமதியில் வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பும் ஒரு காரணம் என்று தெரியவருகிறது.
மேற்குலகம் பல பொருளாதார தடைகளை விதித்தாலும், ரஷ்யாவின் நாணயத்தின் மதிப்பு இவ்வாறு வெற்றிநடை போடுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.