உக்ரேன் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - கருத்தடை சாதனங்களுடன் அலையும் ரஷ்ய வீரர்கள்!
உக்ரைனில் சிக்கிய பெண்களை ரஷ்ய வீரர்கள் பலாத்காரம் செய்கின்றதாக உக்ரைன் பெண் எம்.பி (Maria Mezentseva)ஒருவர் கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் பெண்களை வன்கொடுமை செய்வதைப் பற்றிய தகவல்கள் பல வாரங்களாக இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, ட்விட்டரில் வந்த ஒரு வீடியோவில் ,
ரஷ்ய வீரர் ஒருவர் தனது பையிலிருந்து ஒரு சில கருத்தடை சாதனங்களை வெளியே எடுக்கும் காட்சி இருந்ததை பார்த்த பல நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் .
இது குறித்து உக்ரைன் நாட்டு எம்.பி. மரியா மெசென்ட்சேவா (Maria Mezentseva) கூறுகையில் ,
ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ரஷ்ய வீரர்களால் பல பெண்கள் கணவரின் பிணங்களுக்கு நடுவே , பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள ப்ரோவரி ரேயோனில் உள்ள ஒரு கிராமத்தில், ரஷ்ய வீரர் ஒருவர் பெண்ணின் கணவனை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரை தனது குழந்தையின் முன்னிலையில் பலமுறை சீரழித்த சம்பவம் நடந்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு உக்ரைன் நாட்டு மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் ரஷ்ய வீரர்களுக்கு எச்சரித்துள்ளார்.