பிரித்தானியாவின் முக்கிய கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல்
பிரித்தானியாவைச் சுற்றியுள்ள முக்கியமான கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பல் பிரித்தானியாவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பின் உட்கட்டமைப்பை வரைபடமாக திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரித்தானியாவையும், அயர்லாந்தையும் இணைக்கும் எரிவாயு குழாய்த்திட்டத்தை ஆய்வு செய்தபோது, ரஷ்யாவிற்கு சொந்தமானது என நம்பப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் செயற்பாட்டை புகைப்படம் எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் சொந்த நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக பிரித்தானியாவின் கடற்பரப்புகளின் ரஷ்யாவின் கப்பல்கள் ஊடுருவது 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.