சோகமயமான பிரித்தானியா; அரண்மனை முன் அலையென திரண்ட மக்கள்!
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின்(Elizabeth) உடலுக்கு அஞ்சலி செலுத்த அலையென மக்கள் திரண்டுள்ளனர்.
இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு(Elizabeth) சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத்(Elizabeth) நேற்று உயிரிழந்தார்.
அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத்(Elizabeth) மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராணி எலிசபெத்(Elizabeth) மறைவு செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகிறது.
ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் அலையென திரண்டுள்ளனர்.