கனடாவில் சிறார்கள் இருவர் தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுப்பு
கனடாவின் Saskatchewan மாகாணத்தில் 7 வயது மற்றும் 8 வயதில் சிறார்கள் இருவர் மாயமான நிலையில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Saskatchewan மாகாணத்தின் ஷானவோன் நகரில் திங்களன்று மதியத்திற்கு மேல் 7 வயது லூனா பாட்ஸ் மற்றும் எட்டு வயது ஹண்டர் பாட்ஸ் ஆகிய இருவரும் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இரு சிறார்களும் ஈஸ்டென்ட் பகுதியை சேர்ந்த 50 வயதான பெஞ்சமின் மார்ட்டின் மூர் என்பவருடன் இருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு நம்புகிறது. மூர் ஐந்தடி, 10 அங்குல உயரம் மற்றும் 200 பவுண்ட் எடை கொண்டவர் எனவும் கருப்பு நிற தலை முடியுடன் காணப்படுகிறார் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மூவரும் ஆல்பர்ட்டாவில் பதிவு செய்யப்பட்ட, வாகன இலக்கம் CGC2492-ல் பயணிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களுடன் தாயாரும் பயணப்பட வாய்ப்பிருப்பதாகவும், அமெரிக்கா சென்றிருக்கலாம் எனவும் பொலிசார் கூறுகின்றனர்.
இவர்களில் எவரையேனும் தனியாகவோ அல்லது இணைந்தோ காண நேர்ந்தால் உடனடியாக 911 இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.