சஸ்கட்ச்வான் படுகொலைச் சம்பவங்களுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்
சஸ்கட்ச்வான் படுகொலைச் சம்பவங்களுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த படுகொலைச் சம்பவத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய அரச குடும்பத்தினர், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவி, சேர்பியாவின் ஜனாதிபதி, மொல்டோவாவின் ஜனாதிபதி, இஸ்ரேலிய பிரதமர், லத்வீயாவின் பிரதமர், ஹங்கேரியின் ஜனாதிபதி, ஐஸ்லாந்தின் ஜனாதிபதி, ஸ்வீடனின் வெளிவிவகார அமைச்சர், செக் குடிரசுகளின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சஸ்கட்ச்வான் முதல்வர் ஸ்கொட் மோய் ஆகியோரும் ஏற்கனவே இந்த தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.