மது விற்பனை செய்யலாம்; சவுதி அரேபியா அனுமதி
சவுதி அரேபியா தனது கடுமையான மதுபான விதிகளில் குறிப்பிடத்தக்க தளர்வை அறிவித்துள்ளது.
அதன்படி முதன்முறையாக, சவுதி அரேபியாவில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அனுமதிக்கு ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது மதுபானம் வாங்க விரும்புவோர் மாதம் ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவராகவும், ப்ரீமியம் குடியுரிமை பெற்றவராகவும் இருக்க வேண்டும். தற்போது ரியாத்தில் உள்ள ஒரே ஒரு மதுபான கடையில் மட்டுமே இந்த விற்பனை நடைபெறும்.
சவுதியின் 'விஷன் 2030' வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, திறமையான சர்வதேச நிபுணர்களை நாட்டிற்கு ஈர்க்கும் நோக்குடன் இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.