பள்ளிவாசல் ஒன்றில் பயங்கரமான குண்டு வெடிப்பு: 28 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தான் - பெஷாவர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ள பெஷாவர் பொலிஸ் ஆணையாளர் ரியாஸ் மெஹ்சூத், பள்ளிவாசலுக்குள் மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்தில் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் பள்ளிவாசல் சுவரின் பெரிய பகுதி உடைந்து விழுந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் பெஷாவர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.