டொரண்டோவில் பெண்கள் கழிவறையில் மோசமான செயலில் ஈடுபட்ட நபரை தேடும் பொலிஸார்
கனடாவின், டொரண்டோவில் பகுதியில் பெண்கள் கழிவறையில் நுழைந்து அசிங்கம் செய்த நபரைக் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்காப்ரோவில் உள்ள ஒரு உணவகத்தில் இடம்பெற்ற இந்த மோசமான சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏப்ரல் 20ம் திகதி மாலை 6 மணியளவில், கிங்ஸ்டன் சாலை மற்றும் வார்டன் அவென்யூ அருகிலுள்ள ஒரு உணவகத்தின் பெண்கள் கழிவறையில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நபர் ஒருவர், பெண்கள் கழிவறைக்குள் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் இதற்கு முன்னதாகவும் பெண்கள் கழிவறைக்குள் பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் கார் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த நபர் கடைசியாக கிங்ஸ்டன் சாலை மற்றும் வால்ஹல்லா புளூவர்ட் பகுதியில் கார் ஓட்டியபடி கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.