பிரித்தானிய ராணியார் எழுதிய ரகசிய கடிதம்! யாருக்காக தெரியுமா?
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் எழுதிய ரகசியம் கடிதம் ஒன்று, இன்னும் 63 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே திறக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பிரித்தானிய ராணியின் கைப்பட எழுதப்பட்ட குறித்த கடிதமானது சிட்னி மக்களுக்காக எழுதப்பட்டதாக கூறப்படுகின்றது.
சிட்னி நகரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ராணி விக்டோரியா கட்டிடத்தில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் மூடப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.குறித்த கடிதமானது நவம்பர் 1986ல் கட்டிடம் புதுப்பிக்கப்பட்ட பிறகு ராணியாரால் எழுதப்பட்டது.
அந்த கடிதம் , பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட முக்கிய பகுதியில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் அக் கடிதத்தில் ராணியார் என்ன குறிப்பிட்டுள்ளார் என அவரது தனிப்பட்ட ஊழியர்களுக்கும் தெரிந்திரிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், அந்த கடிதத்தை பாதுகாக்கவும், அதை எப்போது திறந்து பார்க்க வேண்டும் என்பதையும் ராணியாரே கட்டளையிட்டுள்ளார்.தற்போது பிரித்தானிய ராணியார் மறைந்துள்ள நிலையில், தேசம் மொத்தமும் துக்கமனுசரித்து வருகிறது.
அவரது இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் 7 நாட்கள் வரையில் துக்கமனுசரிப்பு நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.
ராணியார் எழுதிய குறிப்பு
ராணியார் சிட்னி மக்களுக்கு எழுதிய கடிதமானது நகர மேயரின் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்த்துகள், எதிர்வரும் 2085ல் உரிய ஒரு நாளில், இந்த கடிதத்தை திறந்து, அதன் செய்தியை சிட்னி மக்களுக்கு அறிவிக்க வேண்டுகிறேன் என ராணியார் குறிப்பிட்டுள்ளார். விக்டோரியா மகாராணியின் வைர விழாவினை முன்னிட்டு ராணி விக்டோரியா கட்டிடமானது 1898ல் திறக்கப்பட்டது.
1959ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் வாகன நிறுத்தத்திற்காகவும், குறித்த கட்டிடமானது கிட்டத்தட்ட இடிக்கப்படும் நிலை ஏற்பட்டடது.
அதேவேளை 1954 முதல் மொத்தம் 16 முறை மறைந்த ராணியார் அவுஸ்திரேலியா விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.