நகரும் வாகனத்தில் இருந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்: புகைப்படம் வெளியானது
செர்பியாவில் நகரும் வாகனத்தில் இருந்து சாலையில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
21 வயதான அந்த நபர் செர்பிய ராணுவத்தில் பணியாற்றும் நபரின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
வியாழக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் மாயமான Uros Blažić வெள்ளிக்கிழமை பகல் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இது ஒரு பயங்கரவாத செயல் என செர்பிய உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Uros Blažić உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் எனவும், ஒருமுறை பொலிசார் ஒருவரை தாக்கியுள்ளார் எனவும், துப்பாக்கி தோட்டாக்கள் தொடர்பில் ஒருமுறை கைதானதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய சட்டத்தின்படி, செர்பியாவில் பதிவுசெய்யப்பட்ட துப்பாக்கி வைத்திருப்பவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், ஆரோக்கியமானவராகவும், குற்றப் பதிவு இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
முன்னதாக புதன்கிழமை Vladislav Ribnikar பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 சிறார்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயங்களுடன் தப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.