ரஷ்யா- உக்ரைன் போன்று போருக்கு தயாராகும் செர்பியா: எல்லையில் படைகள் குவிப்பு
நேட்டோ அறிவுறுத்தலை மீறி கொசோவோ எல்லையில் போருக்கு தயாராக படைகளை குவித்து வருகிறது செர்பியா.
போருக்கு எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க, தாம் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செர்பியாவின் உள்விவகார அமைச்சர் Bratislav Gasic தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்களுடன் காவல்துறையும் எஞ்சிய பாதுகாப்பு அமைப்புகளும் இராணுவ தளபதியின் கட்டளைக்காக தயார் நிலையில் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செர்பிய ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க, நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் கொசோவோ எல்லையில் பணியார்றும் செர்பிய துருப்புகளுக்கும் இந்த உத்தரவு பொதுவானதா என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவில்லை.
பூர்வகுடி அல்பேனியர்களால் கொசோவோ செர்பியர்களுக்கு துன்பம் இழைக்கப்படுவதாகவும், இது அவர்கள் 2008ல் கொசோவோவை சுதந்திரப்பகுதியாக அறிவித்த பின்னர் நடந்தேறும் வன்முறைகள் எனவும் கூறுகின்றனர்.
கொசோவோவின் வடக்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஏற்பட்ட நெருக்கடியை நேட்டோ அமைதிப்படை விசாரித்து வருவதாகவும், சம்பவம் நடந்த பகுதியை செர்பிய ராணுவத்தின் உயரதிகாரிகள் பார்வையிட்டுள்ள நிலையில், அமைதி காக்க வேண்டும் எனவும் நேட்டோ கோரியுள்ளது.
ஆனால் கொசோவோ எல்லையில் குவிக்கப்பட்டுள்ள துருப்புகள் போருக்கு தயார் நிலையில் இருப்பதை செர்பிய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டு, பின்னர் பாராட்டியுள்ளார்.
ரஷ்ய ஆதரவு நாடான செர்பியா, அவர்களின் நிதியுதவியால் தான் ஆயுதங்களையும் குவித்து வருகிறது. கொசோவோ பகுதி மக்கள் தங்களை ஒரு சுதந்திர நாடாக 2008ல் அறிவித்துள்ளதை செர்பியா இதுவரை ஏற்கவில்லை, சில மேற்கத்திய நாடுகள் தலையிட்டு தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
தற்போது உக்ரைன் - ரஷ்யா போன்றதொரு சிக்கல் செர்பியா - கொசோவ்வொ நாடுகளுக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றில் கொசொவோ சுதந்திர நாடாக செயல்படுவதை ஆதரித்துள்ளது.
ஆனால் ரஷ்யா மற்றும் சீனாவை நம்பியிருக்கும் செர்பியா, ஏற்க மறுத்துள்ளதுடன், கொசோவோ தங்களின் பிராந்தியம் எனவும் கூறி வருகிறது.