கனடாவில் பெண்களை மயக்கி துர்நடத்தையில் ஈடுபட்டவர் குறித்து வெளியான திடுக் தகவல்கள்
கனடாவின் ஹாமில்டன் நகரில் பெண்களை ரகசியமாக மயக்கி, பாலியல் வன்புணர்வு செய்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்த பிரையன் ஹேவர்ட் (Bryan Hayward) என்பவர் நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹேவர்ட் , பெண்களுக்குத் தெரியாமல் அவர்களின் உணவிலோ அல்லது ஊசி மூலமாகவோ போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.
பின்னர் அவர்களை வன்புணர்வு செய்ததோடு, அந்த வீடியோக்களை சர்வதேச ரகசிய இணையக் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவு செய்த வீடியோ ஒன்றில், மயக்கமடைந்த பெண்ணின் காதில் "உனக்கு இது எதுவும் நினைவிருக்காது" என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.
அவரது துண்டிக்கப்பட்ட இடது கை அடையாளத்தை வைத்தே பொலிஸார் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

மொத்தம் 7 பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் ரகசியமாகப் படம் பிடித்தல் உள்ளிட்ட 21 குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஸ்லீபிங் வித் தி எனமி என்ற ஆவணப்படத்தின் மூலமே இவரின் கொடூரச் செயல்கள் உலகிற்குத் தெரிந்தன. ஹேவர்டுக்கான தண்டனை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும், மற்றுமொரு கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பாக அவர் செப்டம்பர் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.