நாளை தேர்தல்: அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுவெடிப்பு: 26 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்றையதினம் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நாளையதினம் (08-02-2024) பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது,
பிஷின் பகுதியில் அஸ்பந்தியார் காக்கர் என்ற சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் வெளியே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
காக்கர், என்.ஏ.-265 தொகுதியிலும் மற்றும் பலூசிஸ்தான் சட்டசபை தொகுதிகளான பி.பி.-47 மற்றும் பி.பி.-48 ஆகிய தொகுதிகளில் இருந்தும் போட்டியிடுகிறார்.
இதேபோன்று முதல் குண்டுவெடிப்பு நடந்ததும், கீலா சைபுல்லா பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது.
இதற்கு முன் துணை ஆணையாளர், யாசீர் பஜாய் கூறும்போது, தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர் என கூறினார்.
காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என டாக்டர் ஹபீப், கூறியுள்ளார்.